அறிவியல் புனைகதை படங்களில் வருவது போல, மனிதர்களுடன் கண் அசைவுகளை புரிந்து கொண்டு பேசும் மற்றும் அவர்களின் உணர்ச்சிகளைக் கண்டறியும் திறன் கொண்ட உலகின் முதல் ஹியூமனாய்டு தோழமை ரோபோவை (Humanoid Companion Robot) சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த முன்னணி ரோபோட்டிக்ஸ் நிறுவனமான யுபிடெக் தயாரித்துள்ள இந்த ரோபோவிற்கு யூவேர்ல்டு யூ1 (UWORLD U1) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
உலகிலேயே வணிக ரீதியாகப் பெருமளவில் உற்பத்தி செய்யப்படவுள்ள முதல் தோழமை ரோபோ இதுவே ஆகும்.
தனிமையைத் தீர்க்கப் போகும் ஹியூமனாய்டு! முக பாவனைகளுடன் பேசும் உலகின் முதல் ரோபோ அறிமுகம்
