12ஆவது பெய்ஜிங் சியாங் ஷான் மன்றக் கூட்டம் 18ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சீனத் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் துங் ஜுன் இக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.
அவர் கூறுகையில், இவ்வாண்டு ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போர் மற்றும் உலகப் பாசிச எதிர்ப்புப் போர் வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நிறைவாகும். சீனப் படை பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, அரசுரிமையின் சமத்துவத்தைப் பேணிக்காத்து, இரண்டாவது உலகப் போருக்கு பிந்தைய ஒழுங்கைப் பாதுகாத்து, பலதரப்புவாதத்தை ஆதரித்து, கூட்டு நலன்களைப் பேணிக்காத்து, உலகளாவிய நிர்வாக அமைப்பு முறையை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தத்தைக் கூட்டாக முன்னேற்ற விரும்புவதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், சீனப் படை பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, பரஸ்பர ராணுவ நம்பிக்கையை தொடர்ந்து ஆழமாக்கி, பலதரப்பு ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, உலக அமைதியைப் பேணிகாப்பதற்கும் மனித குலத்தின் பொது எதிர்கால சமூகத்தை உருவாக்குவதற்கும் மேலதிகப் பங்காற்றும் என்றும் தெரிவித்தார்.