சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 10ஆம் நாளில், அழைப்பின் பேரில், கத்தார் தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான முகமத், பாகிஸ்தான் துணைத் தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான டார் ஆகியோருடன் முறையே தொலை பேசி மூலம் தொடர்புகொண்டார்.
மத்திய கிழக்கு பிராந்திய நிலைமை மற்றும் கத்தாரின் நிலைப்பாடு குறித்து முகமத் விளக்கிக் கூறினார். தேவையான தற்காப்பு நடவடிக்கைகளை கத்தார் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சீனாவின் நியாயமான நிலைப்பாடு மற்றும் இணக்க முயற்சியை கத்தார் பாராட்டுவதாகவும், போர் நிறுத்தத்தை நனவாக்குவதற்கு சீனா மேலும் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று கத்தார் விருப்பம் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
பாகிஸ்தான் துணைத் தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான டார் கூறும் போது, தற்போதைய ஈரானின் நிலைமை குறித்து பாகிஸ்தானின் நிலைப்பாட்டை விளக்கமளித்தார். பல்வேறு தரப்புகள் அமைதியான பேச்சுவார்த்தையின் மூலம் தற்போதைய நெருக்கடியைத் தீர்க்க வேண்டும் என்று டார் வேண்டுகோள் விடுத்தார்.
அப்போது வாங்யீ கூறுகையில்,
வளைகுடா அருகே உள்ள நாடுகளின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் உரிமைப் பிரதேச ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளிக்க வேண்டும். பதட்ட நிலைமையைத் தணிவு செய்து அமைதியை மீட்க சீனா தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக பங்காற்றும் என்றார்.
