அணு ஆயுத விவகாரத்தில் ஜப்பானின் தவறான செயல்கள் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்: சீனா கருத்து

அணு ஆயுதம் இல்லாத மூன்று கொள்கைகளைத் திருத்துவது பற்றி விவாதம் நடத்த ஆளும் கூட்டணி கட்சிகள் ஜப்பானிய அரசுக்கு அளித்த பரிந்துரை குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் 20ஆம் நாள் கூறுகையில்,

இக்கொள்கைகளைக் கடைப்பிடிக்குமாறு ஜப்பானிய உள்ளாட்சி மன்றங்கள் விடுத்த வேண்டுகோள், அமைதிக்கான பொதுமக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கிறது என்றும், ஜப்பானிய அதிகார வட்டாரம் அமைதியான அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி, மீண்டும் இராணுவமயமாக்கலை விரைவுபடுத்தும் தவறான தேர்வு பொதுமக்களால் ஆதரிக்கப்படவில்லை என்பதை இது நிரூபிக்கிறது என்றும் தெரிவித்தார். ஜப்பானிய அதிகார வட்டாரம் அணு ஆயுத விவகாரத்தில் நிலைமையை தவறாகக் கணித்து, அணு ஆயுதம் இல்லாத மூன்று கொள்கைகளை திருத்த தொடர்ந்து முயன்று, கூட்டாளி நாடுகளின் அணு ஆயுதங்களை ஜப்பானில் அமைக்க அறிமுகப்படுத்தினால், இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கிற்கும் உலகளாவிய அணு ஆயுதப் பரவல் தடுப்பு அமைப்புமுறைக்கும் எதிரான கடும் ஆத்திரமூட்டல் மட்டுமல்லாமல், அமைதிக்கான ஜப்பானின் சொந்த உறுதிமொழிக்கும் அந்நாட்டின் பொதுமக்களின் விருப்பத்துக்கும் புறம்பானதாக அமையும். இறுதியில் ஜப்பானுக்கு இதனால் கடும் விளைவுகள் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

You May Also Like

More From Author