ஐ.நா பாதுகாப்பு அவை ஆகஸ்ட் 6ஆம் நாள் வெளிப்படையான கூட்டம் ஒன்றை நடத்தியது.
இதில், பெருமளவு பேரழிவு ஆயுதங்கள் பரவல் தடுப்புப் பணிக்குப் பொறுப்பான 1540 கமிட்டியின் பணி பரிசீலனை செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய ஐ.நாவுக்கான சீனாவின் துணைப் பிரதிநிதி கெங்சுவாங், சீனா பேரழிவு ஆயுதங்கள் பரவல் தடுப்புப் பணியை நடைமுறைப்படுத்தி வருவதோடு, அமைதி நோக்கத்துக்காக இத்தகைய ஆயுதங்களைப் பயன்படுத்தும் உரிமையை உறுதியாகப் பேணிக்காக்கும் என தெரிவித்தார்.
அப்போது அவர் மேலும் கூறுகையில்,
அறிவியல் தொழில் நுட்பம் கொண்டு வரும் வளர்ச்சி நலன்களை அனுபவிப்பது, பல்வேறு நாடுகளின் இயல்பான உரிமையாகும். இது தொடர்புடைய சர்வதேச விதிகள், ஐ.நாவின் தீர்மானங்கள், சர்வதேசப் பாதுகாப்புத் துறையில் அமைதி நோக்கத்துடன் சர்வதேச ஒத்துழைப்பைப் பயன்படுத்துவது எனும் சீனாவின் ஆலோசனை முதலியவை, இந்த கோட்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது. ஆயுதப் பரவல் தடுப்பு எனும் நோக்கத்தை நனவாக்குவதோடு, வளரும் நாடுகள் ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான தடுப்புகளை சர்வதேச சமூகம் முயற்சியுடன் நீக்கி, அமைதி நோக்கத்துடன் சர்வதேச ஒத்துழைப்புகளைப் பயன்படுத்துவதை விரைவுபடுத்த வேண்டும் என்றார்.
பேரழிவு ஆயுத பரவல் தடுப்பு என்பது, உலகின் பாதுகாப்பு மேலாண்மை கருப்பொருளாகும். இதனை நடைமுறைப்படுத்த பல தரப்புவாதம் வாய்ந்த உலகளவிலான தீர்வு திட்டம் மற்றும் மெருமளவில் சர்வதேச சமூகத்தின் பங்கெடுப்பு முதலியவை தேவைப்படும். கூட்டு, பன்னோக்கம், ஒத்துழைப்பு, தொடர்ச்சிவல்ல பாதுகாப்பு கண்ணோட்டத்தை நிலைநிறுத்தி, சாதகமான பிரதேசம் மற்றும் சர்வதேச பாதுகாப்புச் சூழலை உருவாக்கி, பல்வேறு நாடுகளின் நியாயமான கவனத்தைக் கருத்தில் கொண்டு, பேரழிவு ஆயுதங்களைப் பரவல் செய்வதற்குரிய காரணங்களை ஒழித்து, கூட்டுப் பாதுகாப்பு எனும் நோக்கத்தை நனவாக்கக் கூட்டாக முயற்சி செய்ய வேண்டும் என்றார்.