நவீன விரிவான போக்குவரத்து அமைப்புமுறையை உருவாக்க சீனா திட்டம்

15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தின் துவக்கம் பற்றிய செய்தியாளர் கூட்டத்தை சீன அரசவையின் தகவல் பணியகம் ஜூலை 21ஆம் நாள் நடத்தியது. இதில் சீனப் போக்குவரத்து துறையின் துணை அமைச்சர் சூ சேங்குவாங் கூறுகையில், நவீனமயமாக்க விரிவான போக்குவரத்து அமைப்புமுறையை அடிப்படையில் உருவாக்குவது என்பது, 15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் சீனப் போக்குவரத்து துறையின் வளர்ச்சிக்கான பொது இலக்காகும் என்று தெரிவித்தார். இந்த இலக்கிற்காக, தேசிய அளவில் உயர்தர விரிவான போக்குவரத்து வலையமைப்பைக் கட்டமைக்க வேண்டும் என்றும், போக்குவரத்து துறையின் நவீனமயமாக்க வளர்ச்சியின் தேவைக்கிணங்க, ஒருங்கிணைந்த தொடர்பு, பாதுகாப்பு நிலை உயர்வு, எண்ணியல் மற்றும் நுண்ணறிவார்ந்த மேம்பாடு, பசுமையான மாற்றம் ஆகியவை தொடர்பான பணிகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

You May Also Like

More From Author