வரலாற்றில் ஏற்பட்ட ஒவ்வொரு தொழில்நுட்ப புரட்சியும், அடிப்படையில் மனித திறனின் வெளிப்புறமாக்கத்தையும், மனித தன்மை பற்றிய மறுவரையறையையும் குறிக்கிறது. இந்நிலையில் ஏஐ வருமையால் மேலும் ஆழ்ந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 2026 உலக ஏஐ மாநாடு மற்றும் உலகளாவிய ஏஐ நிர்வாகம் பற்றிய உயர்நிலை கூட்டத்தில், மக்களை மையமாகக் கொண்டு மனிதரின் நலன்களுக்கு ஏற்ற ஏஐ உருவாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சீனா முன்வைத்தது.
ஏஐ பற்றி சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன் உலகளாவிய இணையப் பயனர்களிடையில் நடத்திய கருத்து கணிப்பின்படி, வேகமான ஏஐ வளர்ச்சி, உலகப் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்துக்கு புதிய சவால்களைக் கொண்டு வருகிறது என்று 85.4 விழுக்காட்டினர் தெரிவித்தனர். தொழில்நுட்ப தடைகள் மற்றும் டிஜிட்டல் சுவர்கள் உலகத் தொழில்நுட்ப ஒத்துழைப்பைப் பாதிக்கும் என்று 87.8 விழுக்காட்டினர் கவலை தெரிவித்தனர். மேலும், ஏஐ நிர்வாக முறைமையின் நியாயம் மற்றும் உள்ளடக்கும் தன்மையை உத்தரவாதம் செய்யும் வகையில், இம்முறைமையின் விதிமுறையை உருவாக்குவதில் அதிகமான வளரும் நாடுகளும் உலகளாவிய தெற்கு நாடுகளும் பங்கெடுக்க வேண்டும் என்றும் 82.6 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.
