உலகளாவிய இணைய பாதுகாப்பு நிரந்தர அமைப்பு முறை பற்றிய ஐ.நாவின் முதல் கூட்டம் 20ஆம் நாள் நியூயார்கிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் துவங்கியது.
இதில் சீன பிரதிநிதிக் குழு உலக அமைப்பு முறைக்கு எண்ணியல் மற்றும் நுண்மதி யுகத்தில் உலகளாவிய இணைய நிர்வாகம் பற்றிய சீனாவின் நிலைப்பாடு ஆவணத்தை முன்வைத்துள்ளது. இணைய இறையாண்மைக்குப் பின், இந்த முறை, எண்ணியல் இறையாண்மையின் முக்கிய கோட்பாட்டை முன்வைப்பது, சீனா உலகளாவிய ஆட்சி முறை முன்மொழிவை செயல்படுத்தி, இணைய பொது சமூகத்தை உருவாக்குவதை முன்னேற்றுவதற்கான புதிய நடவடிக்கையாகும்.
இவ்வாவணத்தில், அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காக்கும் வகையில், பல்வேறு நாடுகள் இணையத்தில் ஐ.நா சாசனத்தின் கோட்பாட்டைப் பின்பற்ற வேண்டும் என்றும், எண்ணியல் இறையாண்மைக்கு மதிப்பளித்து, பொது வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
