அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் பல பில்லியன் டாலர் மதிப்பிலான சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இக்கூட்டண்மை இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகாலப் பொருளாதார மற்றும் மூலோபாய உறவை மேலும் வலுப்படுத்தும் சட்டப் பூர்வ அடித்தளமாக அமையும் எனக் கருதப்படுகிறது.
வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்வில் அமெரிக்க எரிசக்தித் துறைச் செயலாளர் மற்றும் சவூதி அரேபிய எரிசக்தித் துறை அமைச்சர் இளவரசர் அப்துல்அஜீஸ் ஆகியோர் இதில் கையெழுத்திட்டனர்.
சவூதி அரேபியாவில் அமெரிக்க நிறுவனங்களின் பங்களிப்புடன் அணுமின் நிலையங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு(AI) தரவு மையங்களுக்கான ஆற்றல் கட்டமைப்புகளை உருவாக்க வழிவகை செய்யப்படும்.
கூட்டு ஆய்வுகளுக்குப் பிறகு, சவூதி மண்ணிலேயே யுரேனியம் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கான வாய்ப்புகளும் இந்த ஒப்பந்தத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா – சவூதி அரேபியா அணுசக்தி ஒப்பந்தம்
