ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 7 பேர் பலியாகினர் என்றும், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் உள்ளூர் சுகாதாரத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் அளவு ஆரம்பத்தில் 6.2 ஆக மதிப்பிடப்பட்டாலும், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) இதை 6.3 ரிக்டர் என உறுதிப்படுத்தியது.
இந்த நிலநடுக்கம், சுமார் 5.23 லட்சம் மக்கள் தொகை கொண்ட பெரிய நகரமான மசார்-இ-ஷெரீப் (Mazar-e Sharif) அருகே 28 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தின் தாக்கம் ‘உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது மற்றும் பேரழிவு பரவலாக இருக்கலாம்’ என்று குறிக்கும் வகையில், USGS தனது PAGER அமைப்பில் ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7 பேர் பலி; 150க்கும் மேற்பட்டோர் காயம்!
