அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் அமல்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மத்தியில், இஸ்ரேலியப் படைகள் காசா மீது உடனடியாகவும், ‘சக்திவாய்ந்த’ முறையிலும் தாக்குதல்களை நடத்த வேண்டும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதிலும், பதற்றம் அதிகரித்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காசாவின் தெற்குப் பகுதியான ரஃபா நகரில் இருந்த இஸ்ரேலியப் படைகள் மீது ஹமாஸ் அமைப்பு துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது.
அத்துடன், உயிரிழந்த பணயக்கைதிகளின் உடல்களை ஒப்படைப்பதில் ஹமாஸ் தாமதம் செய்ததையும், இது போர் நிறுத்த ஒப்பந்தத்தின் “அப்பட்டமான மீறல்” என்றும் பிரதமர் நெதன்யாகு கடுமையாக கண்டித்தார்.
காசா மீது ‘உடனடி, சக்திவாய்ந்த’ தாக்குதலுக்கு நெதன்யாகு உத்தரவு!
