ஜுலை 24ஆம் நாள் சீன அரசவையின் தகவல் தொடர்பு அலுவலகத்தின் செய்தியாளர் கூட்டத்தில், காவற்துறை அமைச்சகத்தின் பொறுப்பாளர் ஒருவர் வெளியிட்ட தகவலின் படி, இவ்வாண்டு முற்பாதியில், வெளிநாட்டவர்கள் சீனாவில் மேற்கொண்ட சுற்றுலாப் பயணங்களின் எண்ணிக்கை 2 கோடியே 29 இலட்சத்து 14 ஆயிரமாகும். இதில், விசா விலக்கு கொள்கையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை 1 கோடியே 78 இலட்சத்து 15 ஆயிரமாகும். இவை முறையே 20.4 மற்றும் 30.6 விழுக்காடு அதிகரித்துள்ளன.
கோடைகாலத்தில், சீனாவின் ஹூ நன் மாநிலத்தின் சாங் ச்சியாச்சியே சுற்றுலா தளம், குளிரான வானிலை மற்றும் உலகளாவிய ஈர்ப்பு மிக்க இயற்கை காட்சியின் மூலம், உலகின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றது. 240 மணி நேரத்தில் விசா விலக்கு கொள்கையின் மூலம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஹு நன் மாநிலத்திற்கு வரும் முக்கிய நுழை வாயிலாக சாங் ச்சியாச்சியே மாறியுள்ளது. கோடைகால விடுமுறையில், 9 ஐரோப்பா நாடுகளை இணைக்கும் பல விமான வழிகள், சுறுசுறுப்பாக இயங்குகின்றன. ஜுன் மாதத்திற்கு பிறகு, ஷேன்ச்சேன் விமான நிலைய நுழை வாயிலின் மூலம், சீனாவில் புகுந்த ஐரோப்ப சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 31.6 விழுக்காடு அதிகரித்துள்ளது.
