சீனாவின் காற்று மற்றும் சூரிய மின்னாற்றல் உற்பத்தி திறன் 2 பில்லியன் கிலோவாட்டைத் தாண்டியது

சீனத் தேசிய எரிசக்தி பணியகம் அண்மையில் வெளியிட்ட தரவுகளின்படி, புதிய ஆற்றல் வளர்ச்சியில் சீனா உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இவ்வாண்டின் முதல் 9 மாதங்களில், புதிதாக பொருத்தப்பட்டுள்ள காற்றாலை மற்றும் சூரிய மின்னாற்றல் உற்பத்தி திறன் சுமார் 17கோடி  கிலோவாட்டை எட்டியது. கடந்த செப்டம்பர் மாதம் வரை, காற்றாலை மற்றும் சூரிய மின்னாற்றல் உற்பத்தியின் மொத்த திறன் 201கோடி கிலோவாட்டை எட்டியது. அவற்றில், சூரிய மின்னாற்றல் உற்பத்தியின் திறன் 131கோடி கிலோவாட் ஆகும், கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட இது 16.5 விழுக்காடு அதிகமாகும். காற்றாலை திறன் 70கோடி கிலோவாட் ஆகும். கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட இது 20.4 விழுக்காடு அதிகமாகும்.

புதிய எரியாற்றலின் விரைவான வளர்ச்சி, எரியாற்றல் துறையில் ஈட்டிணையற்ற பங்காற்றியுள்ளது. இவ்வாண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரை, காற்று மற்றும் ஒளிவோல்ட்டா மின்னாற்றல் உற்பத்தி 193330 கோடி கிலோவாட்டை எட்டியுள்ளது.

இது கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 19370கோடி கிலோவாட் அதிகமாகும். மொத்த மின்சார பயன்பாடு அதிகரிப்பில், காற்று மற்றும் ஒளிவோல்ட்டா மின்னாற்றல் உற்பத்தியின் அதிகரிப்பு 64விழுக்காட்டு பங்களித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author