சீனச் செய்தித் தொடர்பாளர்களின் 4வது கருத்தரங்கு மே 17ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
அதில் அரசவையின் தைவான் விவகார அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ச்சேன் பின் ஹுவா கூறுகையில், தைவான் சுதந்திர சக்தி, தைவான் நீரிணை அமைதி மற்றும் நிதானத்துக்கான மிக பெரிய அச்சுறுத்தல் ஆகும்.
அதுவும், இரு கரை மக்களின் பகைமையைத் தீவிரமாக்கும் ஒரு ஊற்றுமூலம் ஆகும். தைவான் சுதந்திர சக்தியின் தீங்கையும் அபாயத்தையும் தைவான் மக்கள் அறிந்து கொள்ள வைத்து, நாட்டின் ஒன்றிணைப்புக்கான நம்பிக்கையைக் காட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.
தைவான் சுதந்திர சக்திக்கு வெற்றி கிடைக்காது. தைவான் நீரிணை நிலைமையைக் கட்டுப்படுத்தி, இரு கரை உறவின் மேம்பாட்டையும் நாட்டின் ஒன்றிணைப்பு இலட்சியத்தையும் முன்னேற்ற, எங்களுக்குத் திறமை உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.