ஜெனிவாவிலுள்ள ஐ·நா அலுவலகம் மற்றும் ஸ்விட்சர்லாந்தின் பிற சர்வதேச அமைப்புக்கான சீனப் பிரதிநிதி சென் சியு 9ஆம் நாள் ஐ.நா மனித உரிமை மன்றத்தின் 60ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்று உரைநிகழ்த்திய போது உலக மனித உரிமை நிர்வாகத்தில் சீனாவின் நிலைப்பாடு பற்றி விளக்கிக் கூறினார்.
அப்போது, அவர் கூறுகையில், முதலாவது, இறையாண்மை சமத்துவத்தையும் சர்வதேச சட்டங்களையும் பின்பற்றுவது. இரண்டாவது, பலதரப்புவாதத்தை நடைமுறைப்படுத்தி சர்வதேச ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது. மூன்றாவது, மக்களே முதன்மை என்ற கருத்தைப் பரப்புரை செய்து நடைமுறையாக்கத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது உள்ளிட்ட கருத்துக்களை முன்வைத்தார்.
ஒன்றை ஒன்று மதித்து சமத்துவமாக பழகும் அடிப்படையில், உலக மனித உரிமை நிர்வாகத்தில் ஆக்கப்பூர்வமாகப் பங்கேற்று உலக மனித உரிமை லட்சியத்தின் சுமுகமான வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்றச் சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.