மத்திய அரசின் முக்கியத் திட்டமான பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி(PM-KISAN) திட்டத்தின் 21வது தவணைத் தொகையை இன்று பிரதமர் நரேந்திர மோடி கோவையில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார்.
பிரதமர் மோடி, இன்று ஒரே நாளில் நாடு முழுவதும் உள்ள 9 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 வீதம், மொத்தம் ரூ.18,000 கோடி நிதியை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் விடுவித்தார்.
இந்தத் திட்டம் துவங்கியது முதல் இதுவரை நாட்டின் விவசாயிகளுக்கு மொத்தமாக ரூ.4 லட்சம் கோடி நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவி வழங்கப்படுகிறது. இதுவரை 20 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேடையில் பாண்டியனின் உரையை கேட்டு வருந்திய பிரதமர்
