சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 22ஆம் நாள், ஆஸ்திரிய வெளியுறவு அமைச்சர் பீட் மைன்ல்-ரைசிங்கருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.
சீனா மீது நட்புறவு கொள்கையை அந்நாட்டின் புதிய அரசு தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் இரு நாட்டுறவில் தற்போதைய சர்வதேச நிலைமையால் ஏற்படும் அறைகூவல்களைச் சமாளிப்பதை விரைவுபடுத்தி, உலகின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாகப் பங்காற்ற வேண்டும் என்றும் வாங்யீ தெரிவித்தார்.
ஆசியாவில் ஆஸ்திரியாவின் முக்கிய ஒத்துழைப்பு கூட்டாளியாக சீனா விளங்குகிறது. இரு தரப்புகளின் பொருளாதாரம், வர்த்தகம், சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புக்கான சாதனைகள் அதிகரித்து, உள்ளார்ந்த ஆற்றல் மிகுந்தது என்று பீட் மைன்ல்-ரைசிங்கர் தெரிவித்தார்.