இன்றிரவு நிலவின் கீழ்.

Estimated read time 1 min read

Web team

200px-Viceroy_Butterfly.jpg

இன்றிரவு நிலவின் கீழ் 100 நவீன ஹைக்கூ கவிஞர்கள் , நூல் விமர்சனம்:கவிஞர் இரா.ரவி

நூல் ஆசிரியர்(தமிழில்):ஆர்.அபிலாஷ்

நூல் விமர்சனம்:கவிஞர் இரா.ரவி

உயிர்மை பதிப்பக வெளியீடு விலை:ரூ:75

உயிர்மை பதிப்பகத்தின் தரமான வெளியீடாக வந்துள்ளது.அட்டைப்படமே வித்தியாசமாக உள்ளது.நூல் ஆசிரியர் ஆர்.அபிலாஷ் அவர்களின் முதல் நூல்.நூல் ஆசிரியர் ஆங்கில விரிவுரியாளராக பணியாற்றும் அனுபவத்தின் காரணமாக பிறமொழி இலக்கியத்தை மொழிபெயர்த்து தமிழுக்கு வழங்கி உள்ளார்.மகாகவி பாரதியின் கூற்றுப்படி வழங்கி உள்ளார்.பாராட்டுக்கள்.

ஆலன் ஸ்பென்ஸ் தொடங்கி,எஸ்.நான்சியங் வரை 100 அயல்நாட்டுக் கவிஞர்களின் நவீன ஹைக்கூவை,அதன் மூலம் சிதையாமல் அழகுத் தமிழில் அற்புதமாக எழுதி உள்ளார்.தமிழ் ஹைக்கூ ஏற்படுத்தும் உடனடி உணர்வை,மின்னலை மொழிபெயர்ப்பு ஹைக்கூ ஏற்படுத்தவில்லை. என்றாலும் இரண்டாவது முறைப்படித்துப் பார்க்கும் போது மொழிபெயர்ப்பு ஹைக்கூவில் உள்ள அழகை,ஆழத்தை,இயற்கை நேசத்தை ரசிக்க முடிகின்றது.மொழிபெயர்த்த மூலத்தை,ஆங்கிலத்தை கீழே பிரசுரம் செய்து இருப்பது கூடுதல் சிறப்பு,மொத்தத்தில் ஹைக்கூ ஆர்வலர்களுக்கு நல் விருந்தாக அமைந்துள்ள நல்ல நூல.சில கவிஞர்களுக்கு பல ஹைக்கூக்களும் பல கவிஞர்களுக்கு ஒரு ஹைக்கூவும் இடம் பெற்றுள்ளது..

100 நவீன ஹைக்கூ கவிஞர்களில் சிலரின் சிறிய வாழ்க்கைக் குறிப்போடு ஹைக்கூ கவிதைகள்,மூலமாக ஆங்கிலத்திலும்,மொழிபெயர்ப்பான தமிழிலும் உள்ளது.100 கவிஞர்களின் தலா ஒரு ஹைக்கூ மட்டும் உங்கள் பார்வைக்கும்,ரசனைக்கும் இதோ!

வசந்த காலத் தென்றல் காகிதப் பூக்களும் நடுங்கும் – ஆலன் ஸ்பென்ஸ்

ஒன்றை ஒன்று தொடர என் பூனைகள் நிற்கும் இடி இடிக்க � ஜேக் கெரெவேக்

பளு தூக்கும் வீரன் மெல்லத் தூக்குகிறான் தேனீர்க் கோப்பையை – கேரி கேய்<

நினைவு நாள் பிரார்த்தனை ஒரு இளைஞன் கடுமையாய் பிரார்த்திக்கிறான் கைகளின்றி – டை ஹெட்மேன்

தூரத்து மின்னல் லேசாக்கும் அவள் தொடுகையை – பாப் போல்டுமான்

நீரின் விளிம்பு ஆயிரம் நாரைக் கால்கள் நீர்க்குமிழிகளில் – ஸ்டீபன் ஆடிஸ்

திடீர் மழை காலியான பூங்காவில் ஒரு ஊஞ்சல் இன்னும் ஆடுகிறது – மார்கரெட் சூலா

சனி இரவு பிட்சா மற்றும் சிகரெட்டுகள் வெண்கல மனிதனின் தலைமீது – சதார்டு மேப்சன்

ஆற்றுக்குள் ஆழமாய் பெரிய மீன் அசைவின்றி கிடக்கும் உள் நீரோட்டத்தை பார்த்தபடி – ஜேம்ஸ் வில்லியம் ஹேக்கெட்

கடல் சீற்றம் மில்லியன் அலைகளாய் சிதறினார் மணல் புத்தர் – ஸ்டன் ஃபொர்ட் எம்ஃபாரஸ்டர்

நிலவொளி துளைக்கும் என் காலி வயிற்றை – டானேடா சன்டோகா

என் மரணித்த சகோதரன் அவன் சிரிப்பு கேட்கிறேன் என் சிரிப்பில் – நிக்விர் ஜிலியோ

இன்றைய காலைப்பணிக்கு வாசல் திறக்கிறேன் அதன் மவுனம் – லெனார்டு டி மூர்

முதல் பட்டாம்பூச்சி குழந்தை கேட்கும் நிஜமா என – ரீத்தா ஓடே

புத்தர் இறந்தார் விட்டுச் சென்றார் ஒரு பெரும் வெற்றிடம் ஆலன் ஜீன்ஸ்பெர்க்

வெண்ணிறக் காலை பேருந்து நிறுத்தப் பெண் ஆப்பில் கடிக்கிறான் – மேகன் ஆர்க்கென்பெர்க்

கோடை முடிவு கரும்பூனை வாயில் மாட்டின சிள்வண்டு இரைச்சல் – டேவ் ரஸ்ஸோ

பாலை மணல் புத்தரின் குவிந்த கையில் மன்சனார் அஸ்தமனம் – காரொளின் ஹால்

கடற்கரை யோகா எங்கோ கலவலக் காவலர்கள் – டெரி ஆன் கார்ட்டர்

தனியாய் ராட்சத சக்கரத்தின் உச்சியில் நிலா – கோர் வான் டென் ஹ்யூவெல்<

புயலில் குவிந்த பனி பட்டையின் கனம் ஆழத்தில் மூழ்கும்- ரோஸ் கவார்டு

குட்டித் தூக்க வேளை குழந்தை காப்பகத்தில் பொம்மைகள் கிடக்கும் படு அமைதியாய்-மைக்கேல் கெட்டெக்

பவுர்ணமியை திரும்பிப் பார்க்கும் வட்டமுகத் தவளை-அன்னா ஹொலெய்

அமைதியான பிற்பகல் நீர் நிழல்கள் தேவதாருப் பட்டையில் அனிதா விர்ஜில்

தச்சன் சுத்தியலில் உயிரும் கந்தூன் பட்டாம் பூச்சி-ஜாக்பெரி

சந்திரோதயம் வாத்துத் தடங்கள் பனியில் – மாத்யூ கெரியாலோ

வசந்தத்தில் காலடி வைக்கும் தேவாலயம் குழந்தை தன் பணப்பையை நிரப்பும் சிள்வண்டு ஓடகளால் நிரை-விக்கர்

கிறிஸ்துமஸ் மாலை என் குழந்தைகள் குறட்டை விடுவதாய் பாசாங்கு செய்யும் – குர்டிஸ் டன்ஸர்

உறைந்த குளம் இறுதி பனிச்சறுக்காளன் ஆடுகிறான் நிலவைச் சுற்றி-ரெபக்கா பால் ரஸ்டு

இழந்த விட்ட குழந்தை ஒரு காய்ந்த டூத் பிரஷ் அலமாரியில் – ஹீதர் மட்ரோஸ்

தொட்டாற் சிணுங்கிகள் மேலும் மேலும் தும்பிகள் – ஜோன் மார்டோன்

புதைசேற்று விளிம்பு எழும் வாத்துக்களின் கடும் காற்று எங்கள் கூந்தலில்-எப்பா ஸ்டோரி

திங்கள் காலை போக்குவரத்து நெரிசல் மெல்ல நிதானமாய் மழை – போல்மினா

பூக்கள் சிசுவின் வெற்றுக் கால்கள் பெடல் மிதக்கும் காற்றில் கிறிஸ்டன் டெமிங்

மங்கின வெளிச்சம் இரவுச் செவிலி மழையை வர்ணிக்கிறான்-ஜோன் குலொண்ட்ஸ்

சுற்றி எங்கும் வெளிச்சம் விழுகிறது மின்மினிகளின் வயலில் -ரோபார்டு மெய்னோன்

பாதுகாப்பற்று குளிர்மழையில் அவர்களது பனிக்கோட்டை – டோம் கிளவுசென்

மோனத்தில் நதி சொட்டும் அவள் துடுப்பிலிருந்து – கொரோல் வெய்ன்ரைட்

கோடை மதியம் துறவி நீ பென்சிலை எடுக்கிறார் குருவினிடமிருந்து- ஃப்ரடரிக்கேசர்

கைவிடப்பட்ட பண்ணை வீடு தபால் பெட்டியில் பறவைக் கூடும் கைவிடப்பட்டு-எட்வர்டு ரியலி

பழக்கடையில் வீசப்பட்ட பழைய கூடங்கள் மட்டும் தட்டுகளுள் இசை மழை – டோம் டிக்கோ

மெத்தை திணிப்பினூடே கத்திக்கோல் ஒலி கடுங்குளிர் இலையுதிர் நிலவு -டேவிட் லேகவுண்ட்

வெயிலுக்குள் நகர மட்டக்குதிரை உடன் கொண்டு செல்லும் ஏதோ மலை நிழலை-ஜேன் ரெயிச்ஹோல்டு

மழைக்கால காலை பழைய செருப்புகளால் சிற்றறை இருண்டு – சில்வியா போர்கஸ்-ரயன்

கசந்த காற்று சுடரைப் பொத்தின கை மென்னொளிரும் – பெக்கிவில்லிஸ் லைலெஸ்

இலையுதிர்கால மேப்பில் மரம் மஞ்சளாய் காற்று சிதறடிக்கும் குழந்தையின் சிரிப்பை -சார்லஸ் நெதவே

இலையுதிர்கால வானம் வன்காற்ற மடித்து விரிக்கம் குருவிகள் திரளை – அலெக்ஸ் ரொட்டெல்லா

மழைப்பருவ முடிவு கசப்பு மிஞ்சும் காய்ந்த சீமை வாதுமைகளில் – ஸ்டீபன் கவுல்டு

சிற்றோடை அருகே சுடும்பாறை குழந்தையின் ஒவ்வொரு கால்வீரல்;சுவடும் ஆவியாகும் ரூத் யாரோங்

பரபரப்பான இத்தாலிய உணவகம் பிறந்தநாள் வாழ்த்து பாடப்படும் தவறான மேஜைக்கு – மைக்கேல் டைலன் வெல்ச்

ஈரமழை திரும்பத் திரும்பச் சொல்கிறாய் ஏற்கனவே தெரிந்தவற்றை – டேவிட் கருஸேர்

நவம்பர் மாலை மிகத் தோதான ரஷ்யா நாவலை தேர்கிறேன் -பெர்னல் லிப்பி

பழைய நண்பனுடன் அரட்டை எலும்புகள் மட்டும் மிச்சம் நம் தட்டுகளில் – டைரோன் மக்டொனால்டு

விடுவிக்கப்பட்ட கம்பளிப்புழு ஊரும் வட்டங்களில் – மெலெய்ன் மக்லே

இலவச சவாரி பயணத்தில் கவனிக்கிறேன் ஒரு எறும்பு என் திசையில் நடப்பதை பில்லிகோலின்ஸ்

வசந்த கால சூரியன் அவளது கைத்தடியின் க்ளிக் விரைகிறது மெரிலின் ஆப்பிள் வார்க்கர்

வசந்த கால புயல் குரோக்கஸ் செடிக் கூட்டங்கள் மொட்டவிழும் ஆன்ஸ் கெவடர்

போரிலிருந்து ஊருக்கு வந்தவன் சொல்கிறான் உன் பிரார்த்தனைகளல்ல வெறும் அதிர்ஷ்டம் ராண்டி எம்.புரூக்ஸ்

பனித் திப்பிகள் பழைய வடுக்கள் மென்மையாகும் கிரேக் ஸ்குவார்ட்ஸ்

கண்ணாடிக்குள் சவரம் செய்யும் குரங்கு – ராபர்டு மெய்னோன்

கடல் கொந்தளிக்கிறது ஆரஞ்சு நிறத் தோற்றம் மழைக்கால வானில் – லாரா பொடெஜி

காலை பேரெழில் ஆழமாய் நோக்க மறையும் உலகம் – கெரி பார்ட்டன்

காணாமல் போன குழந்தை ஒரு பனி தேவதையைக் கடக்கிறேன் ஒரு முன்புல் வெளியில் – ஆலன் பர்னஸ்

கோடை சாலைப் பயணம் பாதி வழியில் அங்கே நிலா – ரோபர்ட் மோயர்

ரோந்துக் காவலர்கள் சிலந்தியும் ஒளிந்திடும் நீளிருக்கை பின்னே – ரிச்சர்டு கிரேவியக்

பனிக்குச் சற்றுமுன் ஒரு வெள்ளைப் பருந்து வட்டமிடும் இருளும் வானில்- டெபோரோ பி கோலட்ஜி

நெடுங்காத்திருப்பு முதல் இலைக்கு காயல் எல்லை – மாட்டிம்

வயதாகும் வில்லோ மரம் அதன் பிம்பம் நிலையற்று ஒழுகும் ஆற்றில் – ராபர்டு ஸ்பியஸ்

சுற்றுலா நிழல்வலை முற்றம் என் புள்ளியிட்ட வாழைப்பழம் – இவலின் ஹெர்மன்

ஆலங்கட்டி பெய்யும் விடிகாலை உறைந்த பறவைக் காலடிகள் எங்கள் கதவுக்கு வெளியே -சூசன் எய்க்கின்ஸ்

கோடை முடிந்து விட்டது ஒரு குதிரை தம் பிம்பத்தை நடத்திச் செல்லும் ஏரி ஓரமாய் -ஆன் ஆட வுட்

பாசி தொங்கும் மரங்கள் மான் நகரும் வேட்டையாளியின் மௌனத்துள் – வினோனா பேக்கர்

தூக்கத்திலிருந்து விழிக்கிறேன் பனித்தப்பிகள் ஓசை மட்டும் சன்னல் கதவில் – நிக் ஆவிஸ்

ஓளிவட்டம் அன்னங்களின் நீள் கழுத்துக்கள் அமிழ்கின்றன – பிரான்சின் பான் வார்த்

மின்மினி அங்கு அங்கு அல்ல அங்கு- எம்.எல்.பிட்டில் டிலாப்பா

இலையுதிர்கால வானிற்குக் கீழ் பூங்கா சுற்றுலா மேசைகள்; இலைகள் குவித்து -ஹெர்ப் பாரெட்

வெண்மான் கவனமாய் குளம்பை வைக்கும் வசந்த சேற்றில் -டோம் பிளசிங்

காகம் தன் அலகை கூர் தீட்டும் நடைபாதை ஓரமாய் இலையுதிர் காலடியில் – சக் பிரிக்லேய்

கோடை சமவெளியில் கல் உலகின் இருக்கை ஹிக்கி

வாத்தின் அலகுகள் வசந்தகாலச் சேறு சொட்ட- கியோஷி

அடுப்பில் தூங்கும் பூனை ஒரு விசயம் உண்டா அவனுக்குத் தெரியாதது- புசேயி

நிலவொளி அந்தரத்தில் உறைந்து – செயிஷி

வசந்த மலையுச்சி என் கோப்பையில் ஒரு பறவையின் கண்ணீர் – கோஜி யாசூய்

வசந்த மழை அவள் இடது மார்பில் பால் எதிர்பாரா இனிப்பு துரோ ஜெய்யே

விசிறின கூழாங்கல் நிலைக்க ஒரு நிழலை வரிக்கும் – புரூஸ் ராஸ்

நெடுஞ்சாலை ஓய்வு நிறுத்தம் மலைகள் நடுங்கி ஒளிரும் என் காப்பிக் கோப்பையில் – சாண்டுரா மூனி எல்லர்பெக்

சிக்குடிப் பறவைகள் அமரும் இடத்தில் விழுபனி -லிண்டா பிலார்ஸ்கி

மலையின் பனி வரம்புக்கு முன் அன்னங்கள் மழைக்காலத்துக்காய் காத்திருக்கும் -பேட்ரிக் எம்.பிலார்ஸ்கி

மழைக்கால கடற்கரை நிச்சயப்படுத்த விருப்பம் உனக்கு பிறருக்கு சொல்லும் முன்-மார்க்ஸ் லார்சன்

கருகின பொம்மைகள் குட்டி ஆடைகள் தொங்கும் வெளித் துணிக் கொடியில் -ரொன் மோஸ்

என் காதலுக்காகக் காத்திருக்க சிள் வண்டின் பாடல் ஒரு போதும் மாறுவதில்லை -ஷெல்லி சாங்க்

கசப்பான மழைக்கால காலை முதிய நாய் விரைந்து வரும் குளிர் வீச்சமடிக்க -பாட்ரீசியா பெனடிக்ட்

திறந்த ஜன்னல் குயிலின் பாடல் மறையும் தூரத்தில்-வசீல் மல்டோவன்

இலையுதிர் பருவ புயல் அவன் கம்பளிச் சட்டைப் பையில் கழன்ற பொத்தான் -எஸ்.நான்சியங்

பிளம் பூக்கள் திடீர்ப் புயலில் வெடித்து குட்டையில் முகங்கள்-ஜெரால்டு விசனர்

கடிதப் பரிமாற்றம் இவ்வருடத்தை வரவேற்க வேறு சிறந்த வழியில்லை-ஜோன் பிராண்டி

ஒவ்வொரு முறையும் நான் வெளியே செல்லும் போது உலகம் புதுசாக இது நடந்து வந்துள்ளது வாழ்வெல்லாம்-ஜிம் ஹாரிசன்

மழைத்துளிகள் மறைய கேட்கிறேன் துறவி மர மணியில் தட்டுதல்-பெட்ரிசியா டொனகன

புலம் பெயரும் தூக்கணாங்குருவி மழை மற்றும் இலைகளின் மிருதுவான வீழல்-வெர்ஜில் ஹட்டன்

ரொட்டெல்லா:இவருடைய ஹைக்கூ நூலில் இடம் பெறவில்லை.

99 ஹைக்கூ கவிதைகளும் நம்முள் 99 சிந்தனைகளை விதைப்பதுடன் இயற்கைக் காட்சிகளை, நிலவை, வானத்தை,பனியை,புத்தரை நம் கண் முன்னே கொண்டு வந்து விடுகிறது.அது தான் படைப்பாளியின் வெற்றி.

.

Please follow and like us:

You May Also Like

More From Author