மெக்சிகோவில் மேயர் கார்லோஸ் மான்சோ கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் கும்பல் வன்முறை, ஊழல் மற்றும் பாதுகாப்பின்மை ஆகியவற்றைக் கண்டித்தும், மெக்சிகோ சிட்டி உட்படப் பல நகரங்களில் பல்லாயிரக்கணக்கான Gen Z இளைஞர்கள் சனிக்கிழமை (நவம்பர் 15) மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் தலைமையிலான அரசாங்கம் போதைப்பொருள் கும்பல்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்துவிட்டதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.
மிக்கோகனில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராகத் தீவிரப் பிரச்சாரம் செய்து வந்த மேயர் கார்லோஸ் மான்சோ கொல்லப்பட்டதே, இந்த இளைஞர்கள் நாடு முழுவதும் அணிதிரள முக்கியக் காரணமாக அமைந்தது.
மெக்சிகோவில் Gen Z இளைஞர்கள் மாபெரும் போராட்டம்
