தமிழகத்தில் வரும் ஜனவரி 6ஆம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (ஜன.1) வடமேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அறிவித்துள்ளது.
ஜனவரி 6 வரை மழை!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
You May Also Like
More From Author
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 11
May 11, 2024
திருச்செந்தூரில் அன்னதான கூடம் திறப்பு!
February 15, 2024