சீனாவின் ஷென்சோ 21 எனும் விண்கலத்தைச் சேர்ந்த வீரர்கள் குழுவினர் பூமிக்குத் திரும்பிய பின்னர், பெய்ஜிங்கில் முதல்முறையாக பொதுவெளியில் தோன்றி செய்தியாளர் சந்திப்பில் பேசினர். சுற்றுப்பாதையில் 210 நாட்கள் தங்கியிருந்த ஒரே குழு என்ற புதிய சாதனையைப் படைத்த அவர்கள், விண்வெளி பயண அனுபவங்கள் குறித்து இச்சந்திப்பில் பகிர்ந்து கொண்டனர்.
இக்குழுவினர் விண்வெளியில் மூன்றுமுறை விண்கலத்திற்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளை வெற்றிகரமாக நிறைவுசெய்தனர். பல முறையாக சரக்கு ஏற்றுதல் மற்றும் இறக்குதல் பணிகளை மேற்கொண்டனர். பூமியில் இருந்த ஆராய்ச்சியாளர்களின் ஒத்துழைப்புடன், நுண்ணிய ஈர்ப்பு அடிப்படை இயற்பியல், விண்வெளிப் பொருள் அறிவியல், விண்வெளி உயிர் அறிவியல், விண்வெளி மருத்துவம் மற்றும் விண்வெளித் தொழில்நுட்பம் போன்ற துறைகளை உள்ளடக்கிய ஏராளமான விண்வெளி அறிவியல் சோதனைகளையும் அவர்கள் நிறைவு செய்தனர்.
மேலும் விண்வெளி பயணத்தின்போது, சுற்றுப்பாதை சோதனைகளில் பல உள்நாட்டு தொழில்நுட்ப முன்னேற்றங்கள் எட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுப்பாதையில் ஏரோசல் முறையில் செர்ரி தக்காளி மற்றும் கோதுமை சாகுபடியை வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட சாதனைகளும் இதில் இடம்பெறுகின்றன.
