உலக வர்த்தக அமைப்பு பிப்ரவரி 18ஆம் நாள் ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் பொதுக் குழுக் கூட்டத்தை நடத்தியது.
கூட்டத்தில், அமெரிக்கா ஒருதரப்பாக கூடுதல் சுங்க வரியை விதிப்பது மற்றும் அதன் மோசமான விளைவுகள் குறித்து சீனா கடும் கவலை தெரிவித்தது.
உலக வர்த்தக அமைப்புக்கான சீன நிரந்தர பிரதிநிதி லி செங்காங் கூறுகையில், அமெரிக்காவின் ஒருதரப்புச் செயல் உலக வர்த்தக அமைப்பின் விதிகளை அப்பட்டமாக மீறி, உலக வர்த்தக ஒழுங்கைச் சீர்குலைக்கின்றது என்றார்.
ஐரோப்பிய ஒன்றியம், கனடா, பிரேசில், ரஷியா முதலிய 30 க்கும் மேற்பட்ட உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்களும் அமெரிக்காவின் ஒருதரப்புவாதம் குறித்து கடும் கவலை தெரிவித்தனர்.
சர்வதேச சமூகம் ஆதிக்க அரசியலுக்குத் திரும்ப வேண்டாம் என்று கனடா, நியூசிலாந்து, சிங்கப்பூர் ஆகியவை வேண்டுகோள் விடுத்தன.