சீனா மற்றும் அமெரிக்காவைச் சேரந்த தொடர்புடைய குழுக்கள், இலண்டன் பேச்சுவார்த்தையின் தொடர்புடைய சாதனைகளை நிறைவேற்றி வருகின்றன. அதோடு, குறிப்பிட்ட நிபந்தனைகளுக்குப் பொருந்திய கட்டுப்படுத்தப்பட்ட ஏற்றுமதிப் பொருட்களுக்கான விண்ணப்பங்களை சீனா பரிசீலனை செய்து வருகிறது. இது தொடர்பில் அமெரிக்கத் தரப்பு குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சீன வணிகத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் 4ஆம் நாள் தெரிவித்தார்.
யிடிஏ மென்பொருள், எசிடைல், விமான விசைப்பொறி உள்ளிட்டவை சீனாவுக்கு இறக்குமதி செய்ய அமெரிக்கா மீண்டும் தொடங்கியதாக தெரிவித்த அவர், பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்புகள் ஆகியனவே சரியான வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்றும் தெரிவித்தார்.