சீனாவைப் பொருத்தவரை“புதுமையாக்கம்”என்பது தற்போது மிகவும் பிரபலமான சொல்லாகும். உயர்வேகத் தொடர்வண்டி வலைப்பின்னல் முதல் மக்களின் உயிரைக் காக்கும் மருத்துவத் தொழில்நுட்பம் வரை சீனாவில் எங்கெங்கும் புதுமையாக்கத்தைக் காண முடியும்.
சீனாவின் இந்தப் புத்தாக்கத் திறனுக்குப் பின்னால் இருக்கும் இரகசியம் என்ன? என்னும் கேள்வி உங்களுக்குள் எழலாம்.
புத்தாக்கம் என்பது சீன வரலாற்றில் எப்போதும் ஒரு தனித்துவமிக்க அம்சமாக இருந்து வந்திருக்கின்றதா?
சீனர்களாகிய நாங்கள் புத்தாக்கத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்.
3000 ஆண்டுகளுக்கு முன்பு, ஷாங் வம்சத்தின் முதல் அரசரான தாங் தன்னுடைய குளியல் தொட்டியில் “குவோ ழ் சின், ழ் ழ் சின், யோ ழ் சின்” என்னும் சீன மொழித் தொடரைப் பொரித்து வைத்திருந்தார். இதற்கு, “உங்களால் ஒரு நாளில் முன்னேற்றத்தை உருவாக்க முடியும் என்றால் அதை ஏன் ஒவ்வொரு நாளும் செய்யக்கூடாது” என்று பொருள்.
சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு, வெய் புத்தகம் என்னும் நூலில் புதுமையாக்கம் என்னும் பொருளைத் தரும் சீன மொழிச் சொல்லான சுவாங் சின் என்னும் சொல் இடம் பெற்றுள்ளது. இந்தச் ச்சொல்லானது அடிப்படையில், நாம் அனைத்து விதமான கெட்ட விடயங்களை அகற்றி நாட்டின் முன்னேற்றத்திற்குப் புதிய மற்றும் புத்தாக்க வழிமுறையில் தொடர்ந்து பாடுபட வேண்டும் எனக் கூறுகின்றது.
காலத்திற்கேற்ற வகையில் புத்தாக்கத்தை மேற்கொள்வது என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்து வரும் சீனத் தேசத்தின் மிகப் பெரும் நாகரிகத்தை உருவாக்குவதற்குரிய முன்நிபந்தனையாகும்.
தற்போதைய உலகம் தொடர்ச்சியான சீர்திருத்தங்களுக்கு உட்பட்டு வருகின்றது.
இந்த போக்கில் சீனா முன்னணியில் உள்ளது. நாம் மேலே விவாதித்தது போல புத்தாக்கம் என்பது எப்போதும் நாகரிக வளர்ச்சிக்கான முன்நிபந்தனையாகவும், உலக முன்னேற்றத்திற்கான உந்து சக்தியாகவும் திகழ்ந்து கொண்டிருக்கின்றது.