தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT), நடுநிலைப் பள்ளி அளவில் (6 முதல் 8 ஆம் வகுப்பு) அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்காக, 40 வார கால விரிவான ஆன்லைன் டிப்ளமோ படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
பாடத்தின் பெயர் நடுநிலைப் பள்ளிகளுக்கான அறிவியல் கற்பித்தலில் டிப்ளமோ படிப்பு ஆகும்.
இதன் நோக்கம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் அறிவியல் கருத்துப் புரிதலை வலுப்படுத்துதல், கற்பித்தல் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் வகுப்பறை நடைமுறைகளைச் செம்மைப்படுத்துதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்கள் ஆகும்.
இந்தத் திட்டம் மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மை, ஆய்வுத்திறன், விமர்சன சிந்தனை ஆகியவற்றை வளர்ப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.
6-8 ஆம் வகுப்பு அறிவியல் ஆசிரியர்களுக்காக 40 வார ஆன்லைன் டிப்ளமோ படிப்பு
