சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் 17ஆம் நாளிரவு வெளியிட்ட செய்தியின்படி, சீன வெளியுறவு அமைச்சகத்தின் ஆசிய விவகாரங்களுக்கான சிறப்புத் தூதர் 18ஆம் நாளன்று மீண்டும் கம்போடியா மற்றும் தாய்லாந்திற்குச் செல்லவுள்ளார். அவரின் இப்பயணமானது, இருநாடுகளுக்கு இடையே சமரசத்தை ஏற்படுத்தி இரு தரப்புகளின் நல்லிணக்கத்தை விரைவுபடுத்தி, வெகுவிரைவில் அமைதியை நனவாக்குவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
கம்போடியாவும் தாய்லாந்தும் நல்ல அண்டை நாடுகளாகவும் நண்பர்களாகவும் விளங்குகின்றன. இந்நிலையில் இரு தரப்புக்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள மோதலில் சீனத் தரப்பு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இரு தரப்புகளுக்கு இடையிலான நிலைமையை விவரித்து, சொந்த வழிமுறைகளின் மூலம், தற்போதைய சர்ச்சையைக் குறைப்பதற்கு சீனா ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
