2025-26 கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்குத் தகுதி பெற மாணவர்கள் குறைந்தபட்சம் 75% வருகைப் பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாய விதியை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 4 ஆம் தேதி வெளியிடப்பட்ட உத்தரவில், சிபிஎஸ்இ தனது தேர்வு துணைச் சட்டங்களின் விதிகள் 13 மற்றும் 14 உடன் இந்த விதி ஒத்துப்போகிறது என்பதை குறிப்பிட்டு, அக்டோபர் 9, 2024 தேதியிட்ட அதன் முந்தைய சுற்றறிக்கையை மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளது.
இந்த விதி சரியாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, சிபிஎஸ்இ ஒரு நிலையான இயக்க நடைமுறையை (SOP) வெளியிட்டது.
இந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வுக்கு இது கட்டாயம்; சிபிஎஸ்இ கிடுக்கிப்பிடி உத்தரவு
