ஆகஸ்ட் 10ஆம் நாள் வரை, சீனாவின் நீரை தெற்கிலிருந்து வடக்கிற்கு மடைமாற்றும் திட்டப்பணியின் கிழக்கு மற்றும் மத்திய பகுதியின் முதல் கட்டத் திட்டப்பணியில் 9000 கோடி கன மீட்டர் நீர் எடுத்துச் செல்லப்பட்டது.
இத்திட்டப்பணி, பெய்ஜிங், தியான்ஜின், ஹெபெய், ஹெநான், ஷான்டோங், ஜியாங்சு, ஆன்ஹுய் ஆகிய 7 மாநிதங்கள் மற்றும் மாநகரங்களிலுள்ள 48 பெரிய மற்றும் மத்திய நகரங்களுக்கு நன்மை அளிப்பதோடு, 19.5 கோடி மக்கள் தரமிக்க நீரை பெறுகின்றனர்.
சீன தேசிய நீர் இணையத்தின் முக்கிய கட்டமைப்பு மற்றும் முறைமையின் மேம்பாடுடன், யாஞ்சி ஆறு, ஹுவை ஆறு, மஞ்சள் ஆறு, ஹாய் ஆறு முதலிய ஆறுகளில் நிகழ்ந்த வறட்சி மற்றும் மாபெரும் வெள்ளங்களை எதிர்நோக்கி, இத்திட்டப்பணி பங்கு ஆற்றியுள்ளது. அதன் நெடுகிலுள்ள பிரதேசங்களில் வெள்ளம் மற்றும் வறட்சியைத் தடுக்கும் பணியைப் பன்முகங்களிலும் உத்தரவாதம் செய்துள்ளது.
