சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேண்கொண்டுள்ளதை முன்னிட்டு, அமெரிக்க-சீன வணிக கவுன்சிலின் தலைவர் ஷான் ஸ்டெய்ன், சீன ஊடகக் குழுமத்துக்கு சிறப்புப் பேட்டியளித்தார்.
இவ்வாண்டின் மே திங்கள், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்புடன் சீனாவில் சந்திப்பு நடத்தினார். இது குறித்து அவர் கூறுகையில், இந்தச் சந்திப்பு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆக்கப்பூர்வமான மற்றும் நிதானமான நெடுநோக்கு உறவைக் கட்டியமைப்பதை, இரு நாட்டுறவுகளின் அடிப்படையாக வைக்கப்பட்டுள்ளது. இது, இரு நாட்டுப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் தொடர்புக்கும், மானுடவியல் பரிமாற்றத்துக்கும் நிபந்தனைகளை உருவாக்கியுள்ளது என்றார். சீன-அமெரிக்க உறவு குறித்து அவர் கூறுகையில், இரு நாட்டுறவின் நிலைத்தன்மை, இரு நாட்டுக்கும் நன்மை புரிவது மட்டுமல்லாமல், உலகளாவிய பல்வேறு நாடுகளுக்கு உறுதித்தன்மையையும் அளிக்கும். நிலைத்தன்மையுடைய மற்றும் மதிப்புமிக்க அமெரிக்க-சீன உறவைப் பேணிக்காத்தால், பல்வேறு நாடுகள் சொந்த நலன்களை நாடுவதோடு, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஆழ்ந்த பரிமாற்றங்கள் விளைவிக்கும் நலன்களைப் பெற முடியும் என்று தெரிவித்தார். 2026ஆம் ஆண்டு ஜூலை திங்கள் வரை, அமெரிக்கா, சீனாவில் அமைத்த அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 84 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இவ்வாண்டின் முற்பாதியில், அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் முதலீட்டுத் தொகை கடந்த அண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 7.8 விழுக்காடு அதிகம். ஷான் ஸ்டெய்ன் கூறுகையில், சீன-அமெரிக்க ஆக்கப்பூர்வமான மற்றும் நிதானமான நெடுநோக்கு உறவுக்கு, அமெரிக்க வணிகத் துறை பங்காற்ற வேண்டும். இது, இரு நாட்டுத் தொழில் நிறுவனங்கள் பரஸ்பர நலன் தந்து கூட்டு வெற்றி பெறுவதற்கும், இரு நாட்டு மக்களுக்கும் துணைப் புரிவதோடு, உலகத்துக்கும் உறுதித்தன்மையை வழங்கும் என்று தெரிவித்தார்.
