வெள்ளை மாளிகையில் டிரம்ப் நடத்திய வரவேற்பு விழாவில் ஷிச்சின்பிங் பங்கேற்பு

Estimated read time 1 min read

அமெரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் 24ஆம் நாள் காலையில் வெள்ளை மாளிகையில் நடத்திய உற்சாகமான வரவேற்பு விழாவில் கலந்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து, ஷிச்சின்பிங்கும் டிரம்பும் அடுத்தடுத்து உரையாற்றினர்.

140 கோடிக்கும் அதிகமான சீன மக்களின் சார்பில், அமெரிக்க மக்களுக்கும் அமெரிக்கா சுதந்திரம் அடைந்ததன் 250வது ஆண்டு நிறைவுக்கும் வாழ்த்து தெரிவித்த ஷிச்சின்பிங், நட்புறவைத் தொடர்வது, ஒத்துழைப்பை விரிவாக்குவது, இரு நாட்டு மக்களின் நன்மைகளை அதிகரிப்பது ஆகிய காரணங்களுக்காக இப்பயணத்தை மேற்கொண்டுள்ளேன் என்று கூறினார்.

சீனாவும் அமெரிக்காவும் இருதரப்புத் தொடர்பை வலுப்படுத்தவும், அதற்கான ஒத்துழைப்பை மேற்கொள்ளவும் இணைந்து செயல்பட வேண்டும். இரு தரப்பு ஒத்துழைப்பு உருவாக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. சீனா–அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பானது, உலகின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது. ஆனால், இரு தரப்பு ஒத்துழைப்பு இல்லாமல், உலகின் பல பிரச்சினைகளைத் தீர்ப்பது கடினமாக உள்ளது என்று ஷிச்சின்பிங் கூறினார்.

மேலும், வரும் 5 ஆண்டுகளில், ஒரு லட்சம் அமெரிக்க இளைஞர்கள் கல்வி மற்றும் பரிமாற்றப் பயணமாக சீனாவிற்கு வருமாறு சீனா அழைப்பு விடுக்கும் என்றார்.

அமெரிக்காவில் வரலாற்று சிறப்புமிக்க அரசுமுறை பயணம் மேற்கொண்ட ஷிச்சின்பிங்கை உற்சாகமாக வரவேற்ற டிரம்ப், இரு நாடுகளும் தொடர்ந்து ஒத்துழைத்து, உலகிற்கு பங்களிக்கும் என்று தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு மேலும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் விதமாக, ஷிச்சின்பிங்குடன் இணைந்து தொடர்ந்து ஒத்துழைப்புடன் செயல்பட விரும்புவதாக டிரம்ப் கூறினார்.

 

You May Also Like

More From Author