15ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் காலநிலை மாற்றப் பணி முக்கியம்

சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் 13ஆம் நாள், 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க ஆண்டு குறித்த சிறப்புச் செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது. 15-வது ஐந்தாண்டுத் திட்டக் காலம், கார்பன் வெளியேற்ற உச்சத்தை எட்டுவதற்கான தீர்மானகரமான ஆண்டாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு 2035ஆம் ஆண்டுக்குள் சீன தேசிய அளவில் உறுதியளிக்கப்பட்ட பங்களிப்புகள் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முக்கியக் காலமுமாகும்.

5 முக்கியத் துறைகளில் சீனச் சூழலியல் மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சகம் மிகுந்த கவனம் செலுத்தி, காலநிலை மாற்றப் பணியை ஒட்டுமொத்த அளவில் விரைவுபடுத்தும்.

முக்கியத் தொழில் துறைகளிலான பசுமையான, கார்பன் குறைந்த மாற்றமயமாக்கத்தை தொடர்ந்து முன்னேற்றுவது, தேசியளவில் கார்பன் சந்தைக் கட்டுமானத்தை விரைவுபடுத்துவது, கார்பன் வெளியீட்டைக் கணிப்பதற்கான கட்டமப்பை மேம்படுத்துவது, காலநிலை தலையீடுகளைச் சமாளித்து அடிப்படை செயல்திறன்களை நிலைநிறுத்துதல் உள்ளிட்டவற்றை ஆழமாக்குவது, காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் சர்வதேச ஒத்துழைப்புகளை ஆக்கப்பூர்வமாக வற்புறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய துறைகள் இதில் காணப்படும்.

You May Also Like

More From Author