15ஆவது ஐந்தாண்டு காலத்தில் எழில் மிக்க சீனாவின் கட்டுமானக் காட்சி வெளியீடு

Estimated read time 1 min read

சீனாவின் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர்கள், 13ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், எழில் மிக்க சீனாவின் கட்டுமானம் தொடர்பான நிலைமையை பன்முகங்களிலும் முன்னேற்றுவது பற்றி அறிமுகப்படுத்தினர்.

முன்னதாக, “எழில் மிக்க சீனாவின் கட்டுமானத்துக்கான 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தை” சீன அரசவை வெளியிட்டுள்ளது. சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஹுவாங் ருன்ட்சூ கூறுகையில், சீனாவின் உயிரின வாழ்க்கைச் சூழல் துறையில் “எழில் மிக்க சீனாவின் கட்டுமானம்” என்பதால் பெயரிடப்படும் முதலாவது ஐந்தாண்டு திட்டம் இதுவாகும் என்று தெரிவித்தார். 15ஆவது ஐந்தாண்டு காலத்தில், எழில் மிக்க சீனா என்ற இலக்கை நோக்கி, சீனா, சுற்றுச்சூழல் நிர்வாகத்தை முக்கியமாகக் கொண்டதிலிருந்து, மாசுபாட்டையும் கரியையும் குறைப்பது, பசுமையை விரிவாக்குவது ஆகியவற்றைப் பன்முகங்களிலும் இசையாகவும் முன்னெடுக்கும் வளர்ச்சி முறையாக மாறுவதை இது வெளிக்காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.

படம்:VCG

You May Also Like

More From Author