வடக்கு மாசிடோனிய அரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

வடக்கு மாசிடோனியா குடியரசின் புதிய அரசுத் தலைவராகப் பதவியேற்றுள்ள கோர்டானா சில்ஜனோவ்ஸ்கா தவ்கோவாவுக்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அண்மையில் வாழ்த்து செய்தி அனுப்பினார்.


சீனாவுக்கும் வடக்கு மாசிடோனியா குடியரசுக்குமிடையே ஆழமான பாரம்பரிய நட்புறவு உண்டு. கடந்த சில ஆண்டுகளில், இரு நாடுகள் பயனுள்ள ஒத்துழைப்புகளை மேற்கொண்டு வந்துள்ளன.

தவ்கோவாவுடன் இணைந்து அரசியல் துறையில் ஒன்றுக்கொன்று நம்பிக்கையை ஆழமாக்கி பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை விரிவாக்கி இரு நாடுகளின் நட்பு ஒத்துழைப்பு உறவை புதிய நிலைக்குக் கொண்டு வர விரும்புகிறேன் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

You May Also Like

More From Author