சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் 9ஆம் நாள் வெளியிட்ட தரவின்படி, இவ்வாண்டின் முதல் 5 மாதங்களில் சீன சரக்கு வர்த்தக இறக்குமதி மற்றும் ஏற்றுமதியின் மொத்த தொகை 17லட்சத்து 94ஆயிரம் கோடி யுவானை எட்டி கடந்த ஆண்டை விட, 2.5விழுக்காடு அதிகரித்துள்ளது.
இயந்திர மின் உற்பத்தி பொருள் சீனாவின் மொத்த ஏற்றுமதியில் முக்கிய பங்கீட்டை வகித்துள்ளது. அவற்றில் தொழிற்துறை இயந்திர மனிதர்கள், மின்சார வாகனங்கள், ஒருங்கிணை மின் சுற்றுகள் அமைப்புகள், கட்டுமான இயந்திரங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி முறையே 55.4விழுக்காடு, 19விழுக்காடு, 18.9விழுக்காடு, 10.7விழுக்காடு அதிகரித்துள்ளது.
இரும்புத் தூதுக்கள், கச்சா எண்ணெய், நிலக்கரி ஆகியவை இறக்குமதியின் முக்கிய பகுதியாகும்.
மேலும், ஆசியான், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா சீனாவின் முதல் மூன்று பெரிய வர்த்தக கூட்டாளியாக விளங்குகின்றன.