மேலும் உயர்நிலையிலான “பாதுகாப்பான சீனா” என்ற கட்டுமானம் குறித்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், அண்மையில் முக்கிய உத்தரவிட்டார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டுக்கு பிறகு, “பாதுகாப்பான சீனா” கட்டுமானம் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பெற்றுள்ளது. சீனா, உலகளாவிய மிகவும் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக விளங்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மேலும், புதிய யுகத்திற்கான சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிசம் பற்றிய சிந்தனையை வழிக்காட்டலாக கொண்டு, ஒட்டுமொத்த தேசிய பாதுகாப்பு என்ற கருத்தில் ஊன்றி நின்று, கட்சியின் முழுமையான தலைமையை வலுப்படுத்தி, வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும், பொது பாதுகாப்பு ஆட்சிமுறையின் நிலையை உயர்த்தி, சமூக ஆட்சிமுறையின் அமைப்புமுறையை மேம்படுத்தி, மேலும் உயர்நிலையிலான “பாதுகாப்பான சீனா” என்ற கட்டுமானத்தின் மூலம், சீன நவீனமயமாக்க வளர்ச்சியை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
