புதிய ஐ.நா தலைமைச் செயலாளர் தேர்தல் பற்றிய சீனாவின் நிலைப்பாடு

புதிய ஐ.நா தலைமைச் செயலாளர் தேர்தலுக்கான வாக்கெடுப்பு குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் செப்டம்பர் 28ஆம் நாள் கூறுகையில், சீனா, தொடர்புடைய பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, பொறுப்புணர்வு கொண்ட  மனப்பாங்குடன், ஐ.நா தலைமைச் செயலாளர் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பங்கெடுக்கவுள்ளது என்றார்.

மேலும், ஐ.நா தலைமைச் செயலாளர் தேர்தலானது, ஐ.நாவின் சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சி, உறுப்பு நாடுகளின் நலன்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையது. ஐ.நா சாசனத்தின் விதிகளுக்கிணங்க, சிறந்த திறன் மற்றும் பொறுப்புணர்வு கொண்ட நேர்மையான முறையில் செயல்படும் ஒருவரை புதிய தலைமைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சீனா ஆதரவளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author