சீனாவில் 4 ரயில் பாதைகள் போக்குவரத்துக்குத் திறப்பு

Estimated read time 0 min read

உலகளவில் மிகப் பெரிய உயர்வேக ரயில் வலையமைப்பைக் கொண்ட சீனாவில் 4 முக்கிய உயர்வேக ரயில் பாதை வழித்தடங்கள் செப்டம்பர் 28ஆம் நாள் போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த வழித்தடங்கள், முறையே ஹேபெய் மாநிலத்தின் சியோங்ஆன் புதிய பகுதியை, ஹேனான் மாநிலத்தின் ஷாங்ஜியூ நகருடனும், ஷான்சி மாநிலத்தின் ஷிஆன் நகரை ஆன்காங் நகருடனும், ஹுபெய் மாநிலத்தின் யீசாங் நகரை சிங்ஷான் மாவட்டத்துடனும், ஹெய்லோங்ஜியா மாநிலத்தின் ஹர்பின் நகரை யீசுன் நகருடனும் இணைத்துள்ளன.

சீனாவின் வடக்கு, வடமேற்கு, மையப் பகுதி மற்றும் வடகிழக்கில் பரவியுள்ள இந்த வழித்தடங்கள், உள்ளூர் வாசிகளுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கும் அதேவேளை, பிரதேச இணைப்பை மேம்படுத்தவும் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கவும் உதவும்.

You May Also Like

More From Author