முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆட்சி மற்றும் நிர்வாகத்திற்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர் என்று கூறி புதிய அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
செவ்வாயன்று (ஜூலை 8) சண்டிகரில் கெஜ்ரிவால் மாடல் என்ற புத்தகத்தின் பஞ்சாபி பதிப்பின் வெளியீட்டு விழாவில் பேசிய ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் தனது அரசாங்கத்தின் சாதனையை குறிப்பிட்டு, குறிப்பிடத்தக்க தடைகள் இருந்தபோதிலும், தனது நிர்வாகம் திறம்பட செயல்பட்டதாகக் கூறினார்.
“வேலை செய்வதிலிருந்து தடுக்கப்பட்ட போதிலும், நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். எனக்கு ஆட்சிக்கான நோபல் பரிசு கிடைக்க வேண்டும்,” என்று கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.
லெப்டினன்ட் கவர்னர் மற்றும் பிற அரசியல் தடைகளால் முன்வைக்கப்பட்ட சவால்களைக் குறிப்பிட்டு அவர் இதைத் தெரிவித்துள்ளார்.
‘எனக்கு நோபல் பரிசு கொடுக்கணும்’; அரவிந்த் கெஜ்ரிவால் பேசியது என்ன?
