ஈக்வடார் நாட்டின் அரசுத்தலைவர் டேனியல் ராய்-ஹில்கிறிஸ்ட் நோபோவா அசின் ஆகஸ்ட் 16ஆம் நாள் பெய்ஜிங்கை வந்தடைந்து, 8 நாட்கள் சீனப் பயணத்தை தொடங்கினார். அவர் முதன்முறையாக மேற்கொள்ளும் சீன அரசுமுறைப் பயணம் இதுவாகும்.
ஈக்வடாரின் இரண்டாவது பெரிய வர்த்தகக் கூட்டளியாக சீனா திகழ்கின்றது. வாகனங்கள் மற்றும் வாகன உபகரணங்கள், மின் இயந்திர பொருட்கள், எஃகு பொருட்கள் முதலியவற்றை சீனா ஈக்வடாருக்கு ஏற்றுமதி செய்கின்றது. அதே வேளையில், லத்தீன் அமெரிக்காவில் சீனாவின் 8ஆவது பெரிய வர்த்தகக் கூட்டளியாக உள்ள ஈக்வடார், கச்சா எண்ணெய், சிங்கி இறால், கனிமங்கள் முதலியவற்றை சீனாவுக்கு ஏற்றுமதி செய்கின்றது. 2025ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக தொகை 1733கோடி அமெரிக்க டாலரை எட்டியது. பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்புகள் நடைமுறையில் பல சாதனைகளைப் படைத்துள்ளன.
