சீன-இந்திய பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு மூலம் இரு தரப்புகளும் ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து, கூட்டு வெற்றிப் பெற முடியும். பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்குச் சமமான, நியாயமான, வெளிப்படையான, பாகுபாடற்ற வணிகச் சூழலை இந்தியா உருவாக்க விரும்புவதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் 10ஆம் நாள் தெரிவித்தார்.
