சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 10ஆம் நாள், 2025 சீன சர்வதேச வர்த்தகப் சேவை பொருட்காட்சிக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.
இதில் அவர் கூறுகையில்,
தற்போது, உலகப் பொருளாதாரத்தின் நிலைமை ஆழமாக மாறிக் கொண்டிருக்கிறது. உலகில் வளர்ச்சி அறைகூவல் மற்றும் வாய்ப்புகள் உள்ளன. வெளிநாட்டுத் திறப்பு அளவை உறுதியாக விரிவாக்கி, சர்வதேச சமூகத்தின் உயர் வரையறை பொருளாதாரம் மற்றும் வர்த்தக விதிகளுடன் ஒருங்கிணைந்து, சேவை வர்த்தகத்தின் உயர் தர வளர்ச்சியை விரைவுபடுத்த சீனா பாடுபடும்.
பல்வேறு தரப்புகளுடன் சேர்ந்து, உலகின் சேவை வர்த்தகத்தின் திறப்பு மற்றும் புத்தாக்க ஒத்துழைப்புகளைக் கூட்டாக முன்னேற்றி, திறப்பு தன்மை வாய்ந்த உலகப் பொருளாதாரத்தைக் கட்டியமைத்து, மனித குலத்தின் பொது எதிர்கால சமூகக் கட்டுமானத்திற்கு புதிய உந்து ஆற்றலைக் கொண்டு வர வேண்டும் என்றார்.
2025 சீன சர்வதேச சேவை வர்த்தகப் பொருட்காட்சி செப்டம்பர் 10ஆம் நாளில் பெய்ஜிங் மாநகரில் தொடங்கியுள்ளது.