வடகொரி தொழிலாளர் கட்சி மத்திய கமிட்டிமற்றும் வட கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் அழைப்பை ஏற்று, சீனக் கம்யூனிஸ்ட்
கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், அரசவையின் தலைமை
அமைச்சருமான லீச்சியாங், அக்டோபர் 9ம் நாள் முதல் 11ம் நாள் வரை, சீனாவின் கட்சி
மற்றும் அரசு பிரதிநிதி குழுவுடன் வட கொரியாவுக்குச் செல்ல உள்ளார். அங்கு
தொழிலாளர் கட்சியின் 80வது ஆண்டு நிறைவின் கொண்டாட்ட நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து
கொள்ளவுள்ளனர்.
லீச்சியாங்கின் வட கொரிய பயணம் குறித்து, சீன
வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், செய்தியாளர்
கூட்டத்தில் பதிலளிக்கையில், சீனாவும் வட கொரியாவும் பாரம்பரிய நட்பு கொண்ட அண்டை
நாடுகளாகும். சீன-வடகொரிய உறவைப் பேணிக்காத்து வலுப்படுத்தி வளர்ப்பது, சீனக்
கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசின் உறுதியான நெடுநோக்கு திட்டமாகத் திகழ்ந்து வருகிறது.
இவ்வாண்டு, வட கொரியாவின் தொழிலாளர் கட்சி நிறுவப்பட்ட 80வது
ஆண்டு நிறைவாகும். இதை வாய்ப்பாகக் கொண்டு, வட கொரியாவுடன்
இணைந்து, இரு நாட்டு அதியுயர் தலைவர்களின் ஒத்த கருத்துகளின்
தலைமையில், நெடுநோக்கு சார்ந்த தொடர்பை வலுப்படுத்தி, பரிமாற்றம்
மற்றும் ஒத்துழைப்பை அதிகரித்து,
சீன-வடகொரிய பாரம்பரிய நட்புறவு தொடர்ந்து
வளர்வதை முன்னெடுக்க சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.