“
அஸ்தானாவில் நடைபெற்ற “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு +” என்ற கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் உள்ளூர் நேரப்படி ஜூலை 4ஆம் நாள் பிற்பகல் பங்கெடுத்து, “மேலும் இனிமையான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புத் தாயகத்தைக் கூட்டாக உருவாக்குவோம்”என்ற தலைப்பில் முக்கிய உரை நிகழ்த்தினார்.
அவர் கூறுகையில், தற்போது உலகத்தில் பெரும் மாற்றங்கள் காணப்பட்டுள்ளன. மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகம் என்ற கருத்தைக் கொண்டு, ஷாங்காய் எழுச்சியைப் பின்பற்றி, சொந்த நாட்டின் நிலைமைக்கும், இப்பிரதேசத்தின் உண்மைக்கும் பொருந்திய வளர்ச்சிப் பாதையில் ஊன்றி நின்று, மேலும் இனிமையான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புத் தாயகத்தைக் கூட்டாக உருவாக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
அவர் 5 முன்மொழிவுகளை வழங்கினார்:
முதலாவதாக, ஒற்றுமை மற்றும் ஒன்றுக்கொன்று நம்பிக்கை கொண்ட பொது தாயகத்தைக் கட்டியமைக்க வேண்டும். தத்தமது வளர்ச்சிப் பாதைக்கும் மதிப்பு அளித்து, தத்தமது மைய நலன்களைப் பேணிக்காப்பதற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
இரண்டாவதாக, அமைதி மற்றும் நிலைத்தன்மை கொண்ட பொது தாயகத்தைக் கட்டியமைக்க வேண்டும். பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்புமுறையை மேம்படுத்தி, பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் சவால்களைச் சமாளிப்பதற்கான நிறுவனங்களை நிறுவி, கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மூன்றாவதாக, செழிப்பான வளர்ச்சி அடைந்த பொது தாயகத்தைக் கட்டியமைக்க வேண்டும். பல்வேறு தரப்புகளுடன் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர்தரக் கட்டுமானத்தைப் பன்முகங்களிலும் செயல்படுத்த சீனா விரும்புகிறது. பெய்தாவ் செயற்கைக் கோளின் வழிக்காட்டு அமைப்புமுறையைப் பல்வேறு தரப்புகள் பயன்படுத்த சீனா வரவேற்பதோடு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு எண்ணியல் தொழில்நுட்ப பயிற்சியை வழங்க விரும்புகிறது.
நான்காவதாக, சுமூகமான நட்பார்ந்த பொது தாயகத்தைக் கட்டியமைக்க வேண்டும். பாரம்பரிய மருத்துவக் கருத்தரங்கு, அரசு சாரா நட்பார்ந்த கருத்தரங்கு, இளைஞர்களின் பரிமாற்ற நிகழ்ச்சி, இளைஞர்களின் வளர்ச்சிக் கருத்தரங்கு முதலியவற்றைத் தொடர்ந்து நன்றாக நடத்த வேண்டும்.
ஐந்தாவதாக, நேர்மையான மற்றும் நீதியான பொது தாயகத்தைக் கட்டியமைக்க வேண்டும். சமத்துவமான மற்றும் ஒழுங்கான உலக பலதுருவமயமாக்கத்துக்கும், அனைத்தையும் உள்ளடக்கும் தன்மை வாய்ந்த பொருளாதார உலகமயமாக்கத்துக்கும் ஆதரவு அளித்து, உண்மையான பலதரப்புவாதத்தைச் செயல்படுத்த வேண்டும்.