சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இடநெருக்கடி நிலவி வருவதால், தமிழக அரசிற்கு புதிய நவீன தலைமை செயலக வளாகத்தை கட்டுவதற்கான முதற்கட்டப் பணிகளை முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே இதுகுறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தலைமைச் செயலக வளாகத்தை அமைப்பதற்குத் தற்போது இரு முக்கிய இடங்கள் அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
1.பட்டினப்பாக்கம்: கடலை ஒட்டிய சீரான போக்குவரத்து வசதி கொண்ட பகுதி.
2.கிண்டி ரேஸ் கோர்ஸ்: நகரின் மையப் பகுதியில் பரந்து விரிந்த பரப்பளவு கொண்ட பகுதி.
இவற்றுடன் சேர்த்து நகரின் பிற சில முக்கியப் பகுதிகளும் ஆய்வு செய்யப்பட்டு வந்தாலும், இடத்தின் அதிகாரப்பூர்வத் தேர்வு இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
புதிய தலைமை செயலகம் கட்ட திட்டம்: பட்டினப்பாக்கம், கிண்டி ரேஸ் கோர்ஸ் இடங்கள் பரிசீலனை
