நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், ஆற்றின் மேல் பகுதியில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக மீண்டும் ஒரு பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிலவியல் மற்றும் பருவநிலை நிலவியல் மையங்கள் எச்சரித்துள்ளன.
காத்மாண்டுவை தளமாக கொண்ட ICIMOD வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், நேபாள-சீன எல்லைக்கு அருகில் ஆற்றின் மேல் பகுதியில் இன்னும் பெரிய அளவிலான பனி மற்றும் பாறை இடிபாடுகளின் அடைப்பு அப்படியே உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இது மீண்டும் உடைந்தால், ஜிாலாங் துறைமுகம் மற்றும் கீழ்நோக்கிய பகுதிகளான நுவாகோட், தாடிங் மாவட்டங்கள் மீண்டும் கடுமையாக பாதிக்கப்படலாம் என்பதால் அங்கிருந்து மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
நேபாளத்தில் மீண்டும் பெருவெள்ள அபாயம்? பனிப்பாறை சரிவே பேரழிவுக்குக் காரணம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை
