சீன-இந்திய எல்லை பிரச்சினைக்கான சிறப்புப் பிரதிநிதிகளின் 25ஆவது பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 25ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
இதில் இரு நாட்டுத் தலைவர்களின் ஒத்த கருத்துகளை வழிகாட்டலாகக் கொண்டு, எல்லைப் பகுதியின் சமாதானம் மற்றும் அமைதியைப் பேணிக்காத்து, இரு நாட்டு உறவின் சுமுகமான வளர்ச்சிக்குச் சீரான சூழலை உருவாக்க வேண்டும். தற்போதைய தூதாண்மை மற்றும் இராணுவ வழிமுறைகள் மூலம் எல்லைப் பகுதியின் அனைத்து நிலவரங்களையும் காலதாமதமின்றி கையாள வேண்டும். இராணுவத் தளபதி நிலை பேச்சுவார்த்தைக்கான 2 இடங்களையும், எல்லை பாதுகாப்புக்கான 2 புதிய இராணுவத் தொலைபேசி தொடர்பையும் அதிகரிக்க வேண்டும். எல்லை வர்த்தகம், புனிதப் பயணம் முதலிய பரிமாற்றங்களை அதிகரிக்க வேண்டும் என்று இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
மேற்கூறிய 4 அம்சங்கள் உட்பட மொத்தமாக 8 ஒத்த கருத்துகள் இப்பேச்சுவார்த்தையில் எட்டப்பட்டுள்ளன.
