சீன அரசவையின் தகவல் தொடர்பு பணியகம் 26ஆம் நாள், 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க ஆண்டு எனும் சிறப்பு செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது.
15ஆவது ஐந்தாண்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தி, புதிய ரக தொழில்துறை மயமாக்கத்தை விரைவுபடுத்துவது குறித்த நிலைமையை சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பொறுப்பாளர் ஒருவர் இதில் அறிமுகப்படுத்தினார்.
தகவல்தொடர்பு தொழில் துறையின் உயர் தரமுள்ள வளர்ச்சியை முக்கியமாக முன்னேற்ற இவ்வமைச்சகம் பாடுபட்டு, புதிய தலைமுறை தகவல்தொடர்பு மற்றும் கணித்தல் திறன் வலைப்பின்னல் கட்டுமானத்தை விரைவுபடுத்த வேண்டும். மேலும், முக்கிய தொழில் துறைகளில் 5 ஜி, தொழில்துறை இணையத்தின் பெருமளவு பரவல் மற்றும் பயன்பாட்டை ஊக்குவிப்பதுடன், 6 ஜி தொழில் நுட்பத்தின் ஆராய்ச்சியை ஆழமாக்கி, இணையம் மற்றும் தரவு பாதுகாப்புக்கான உத்தரவாத ஆற்றலை அதிகரித்து, தகவல்தொடர்பு தொழில் துறையின் போட்டி ரீதியில் மேம்பாடு மற்றும் முன்னணியில் தகுநிலையை வலுப்படுத்த இவ்வமைச்சகம் முயற்சி செய்யும் எனத் தெரிவித்தார்.
