இந்தியா-ஜப்பான் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இணைந்து முதலீடுகளை ஈர்க்கும் வகையில் புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார்.
டோக்கியோவில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் பேசிய அவர், இரு நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் மேலும் வலுவடையும் என்றார்.
இந்தியாவில் உருவாகும் புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் பாதியளவு சிறிய நகரங்களில் இருந்து வருவது பெருமைக்குரியது என்றும், இருநாடுகளின் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க ஆற்றலை ஒருங்கிணைத்து உலக அரங்கில் புதிய சாதனைகளை படைக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
