மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூர் பகுதியில் ஆன்மீகம் மற்றும் மூடநம்பிக்கையைப் பயன்படுத்தி, ஒரு போலிச் சாமிஜியால் பெண் ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதாகவும், வீட்டில் உள்ள தோஷங்களை நிவர்த்தி செய்வதாகவும் கூறி வீட்டிற்னுள் நுழைந்த அந்தப் போலிச் சாமிஜி, ஆன்மீகச் சடங்குகள் என்ற பெயரில் அந்தப் பெண்ணையும் அவரது குடும்பத்தையும் தனது வஞ்சக வலைக்குள் வீழ்த்தியுள்ளார். மூடநம்பிக்கையை முதலீடாக்கிப் பாவச் செயல்களில் ஈடுபடும் போலிச் சாமிமார்களின் கொடூர முகம் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சிறப்புப் பூஜை செய்வதற்குப் தேவையான சில அத்தியாவசிய பொருட்களை உடனடியாகக் கடையில் இருந்து வாங்கி வருமாறு கூறி, அந்தப் பெண்ணின் கணவரை திட்டமிட்டு வீட்டிற்கு வெளியே அனுப்பி வைத்துள்ளார் அந்தப் போலிச் சாமிஜி.
கணவர் வீட்டை விட்டு வெளியேறிய சில நிமிடங்களிலேயே, வீட்டில் தனிமையில் இருந்த அந்தப் பெண்ணை மிரட்டி, அவரது பலவீனத்தைப் பயன்படுத்தி மிகக் கொடூரமான முறையில் அந்தச் சாமிஜி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
பூஜைப் பொருட்களை வாங்கிக் கொண்டு கணவர் வீட்டிற்குத் திரும்பிய போது தான், ஆன்மீகவாதி என்ற போர்வையில் நுழைந்தவன் ஒரு கொடூரமான குற்றவாளி என்ற கசப்பான உண்மை அந்த குடும்பத்திற்கு தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட பெண் உடனடியாகத் தனது குடும்பத்தினரின் உதவியுடன் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த அந்தப் போலிச் சாமிஜியை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஆன்மீகத்தின் பெயரால் பெண்களை ஏமாற்றி அவர்களின் வாழ்க்கையோடு விளையாடும் இதுபோன்ற போலிச் சாமிமார்களை பொதுமக்கள் யாரும் எளிதில் நம்ப வேண்டாம் என்றும், மூடநம்பிக்கைகளில் சிக்கித் தங்கள் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
