சீன-கிர்கிஸ்தான் பொது எதிர்காலச் சமூகக் கட்டுமானம்

Estimated read time 1 min read

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அண்மையில் 3வது முறையாக கிர்கிஸ்தானில் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார். கிர்கிஸ்தான், மிக உயர்ந்த மரியாதைச் சிறப்புடன் மதிப்பிற்குரிய விருந்தினரை வரவேற்கிறது. இரு நாட்டுத் தலைவர்களிடையிலான பரஸ்பர நம்பிக்கை மற்றும் நட்புறவை இது காட்டுகிறது.

இப்பயணத்தின் போது, புதிய யுகத்தில் சீன-கிர்கிஸ்தான் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவை உயர்தரத்துடன் வளர்ப்பதன் கூட்டறிக்கை, இரு நாட்டின் நிரந்தர அண்டை நாட்டுறவு மற்றும் நட்பு ஒத்துழைப்பின் ஒப்பந்தம் உள்ளிட்ட 20க்கும் மேலான ஆவணங்களில் இரு தரப்பினரும் கையொப்பமிட்டனர். சீன-கிர்கிஸ்தான் பொது எதிர்காலச் சமூகத்துக்குப் புதிய திட்டத்தை வகுத்துள்ள இரு தலைவர்கள், நடைமுறை செயல்பாடுகள் மூலம் பதற்றமான உலகில் அமைதி மற்றும் செழுமையை நாடுவதற்கு முன்மாதிரியை வழங்கினர்.

வரலாற்றின் புதிய துவக்கப் புள்ளியில் சீன-கிர்கிஸ்தான் பொது எதிர்காலச் சமூகக் கட்டுமானத்தை எப்படி ஆழமாக முன்னெடுக்க வேண்டும்?அரசியல் ரீதியில் உயர்நிலை பரஸ்பர நம்பிக்கை மற்றும் உறுதியான ஆதரவு மிக முக்கியமானதாகும். இதற்கிடையில் ஒன்றுக்கொன்று நலன் தரும் ஒத்துழைப்பு, முக்கிய உந்து சக்தியாகும். நாடுகளுக்கிடையிலான உறவு, மக்களிடையிலான நட்பிலேயே அமைகின்றது. அதனால், இரு நாடுகளின் மக்கள் தொடர்பையும் ஒத்துழைப்பையும் முன்னேற்றி, சீன-கிர்கிஸ்தான் தலைமுறை நட்பார்ந்த சமூக மற்றும் பொது மக்களின் ஆதரவைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும்.

Please follow and like us:

You May Also Like

More From Author